மழை காரணமாக ஹோட்டலில் பிக்பாஸ் போட்டியாளர்கள்? – விஜய் டிவி விளக்கம்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

ஏற்கனவே 3 சீசன்கள் மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் 4வது சீசன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நிவர் புயல் காரணமாக பிக்பாஸ் வீட்டில் அதிக மழை பெய்ததால் வீட்டில் தண்ணீர் தேங்கியதாகவும், போட்டியாளர்கள் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் பரவியது. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்த்து

இதுபற்றி விளக்கமளித்து விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் இந்த செய்தியை மறுத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும், வீட்டிலிருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.