தமிழ் சினிமாவில் சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதன்பின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது ரஜினியை வைத்து ‘அண்ணாத்தே’ படத்தை இயக்கி வருகிறார். ஆனால், கொரோனா பரவல் பயத்தால் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவாவின் தந்தை ஜெயக்குமார் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். சென்னையில் தங்கியிருந்த அவருக்கு நேற்று மாலை திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஒரு தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
சிவாவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.