லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என அவரின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். படம் முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இப்படம் வெளியாகவில்லை. சூரரைப்போற்று உள்ளிட்ட சில படங்கள் ஓடிடியில் வெளியான போதும் இப்படம் வெளியாகவில்லை. தீபாவளிக்கு வெளியாகும் என விஜய் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் டீசர் வீடியோ மட்டுமே வெளியானது.

மேலும், ஓடிடியில் மாஸ்டர் வெளியாகிறது என அவ்வபோது செய்திகள் வெளிவருவதும், அதை தயாரிப்பு நிறுவனம் மறுப்பதும் தொடர்ந்து வந்தது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு தியேட்டரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதேநேரம் பிரைம் வீடியோ இப்படத்தை வாங்கியுள்ளதாக தெரிகிறது. தியேட்டரில் வெளியாகி சில நாட்கள் கழித்து இப்படம் ஒடிடியில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.

எனவே, பொங்கல் விருந்தாக மாஸ்டர் வெளியாவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Source: Vellithirai News

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending