வேற மாறி மாறி… தெறி மாஸ் வீடியோ…. தளபதி 65 மரண மாஸ் அப்டேட்….

Published:

vijay

விஜயின் 65வது படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகி விட்டதும், அப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார் என்பதும் ஏற்கனவே வெளியான செய்திதான்.

இப்படத்தின் தலைப்பு ‘டார்கெட் ராஜா’ என தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது. இதை அறிந்த விஜய் ரசிகர்கள் அந்த பெயரில் போஸ்டரையே உருவாக்கி உலவ விட்டுள்ளனர். இந்த தலைப்பை பார்க்கும் போது இப்படம் காமெடி படமாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்நிலையில் விஜய் – நெல்சன் – சன் பிக்சர்ஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதிமாறன், விஜய் மற்றும் நெல்சன் மூவரும் நின்று பேசிக்கொண்டிருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். இது, விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img