இலங்கை தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னர் நிகழ்ந்த அதிரடிகள்!

இந்தியா உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

bombblast srilanka church - 2026

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை தினம் கொண்டாடப் பட்ட நிலையில், இன்று காலை 8.45 தொடங்கி சர்ச்சுகளைக் குறிவைத்து 3 சர்ச்சுகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.

இணையதளங்கள், சமூகத் தளங்கள் முடக்கம்!

குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பிற்காக சமூக வலைத்தலங்களின் செயற்படுகள் முடக்கப் பட்டன. குறிப்பாக பேஸ்புக், வைபர் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பங்களை மையப்படுத்தி போலியான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுவதால், தற்காலிகமாக சமூக வலைத்தலங்களை முடக்க அரசு குறித்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குண்டுவெடிப்பு இடம்பெற்ற பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

தெமட்டகொடை பகுதியில் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் முப்படையினரும் போலீஸாரும், சிறப்பு அதிரடிப் படையினரும் ஈடுபட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

தெமட்டகொடை பகுதியில் இறுதியாக மூன்று வெடிப்புச் சம்பவங்கள் நிகழந்தன.

Srilankabombblast - 2026

குண்டு வெடிப்பு சம்பவங்களில் 8 பேர் கைது:

கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் இடம்பெற்ற மூன்று வெடிப்பு சம்பவங்களையடுத்து அதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேநேரம் தெமட்டகொடை மகவில பூங்கா பகுதியில் வெடிபொருட்களை மீட்கச் சென்ற போது, ஒருவர் வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததில் மூன்று போலிஸார் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.!

வெடிபொருள்கள் ஏற்றி வந்த சந்தேகத்தின் பேரில் வாகன ஓட்டுநர் கைது!

இன்று காலை கொழும்பு நகரில் நடைபெற்ற பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை கொண்டு வந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் வாகன ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

வெள்ளவத்தை இராமகிருஷ்ணா மிஷன் வீதியில் வைத்து இந்த ஓட்டுனர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன! அவரது வாகனத்தில் வெடிகுண்டுகள் கொண்டுவரப்பட்டதாக போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்!

srilanka katuvapitiya person - 2026

பயங்கரவாதியின் படம் வெளியீடு:

நீர்கொழும்பு கத்தோலிக்க சர்ச் ஒன்றில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது! இந்த நபர் பின்புறம் தான் கட்டிக் கொண்டு வந்த பேக் ஒன்றில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்து சர்ச்சுக்குள் வெடிக்கச் செய்ததாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது

hotel bombblast - 2026

ஹோட்டலில் ரூம் போட்டு குண்டு வைத்த இருவர்!

கொழும்பு சங்கரி லா விடுதியில் நேற்று இரண்டு பேர் ஓர் அறையில் தங்கியுள்ளனர்! இந்த இரண்டு பேருமே இன்று விடுதியின் உணவகப் பகுதி மற்றும் நடு மண்டபத்தில் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர் இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது

சங்கரி லா விடுதி குண்டுவெடிப்புக்கு 25 கிலோ எடையுள்ள c 4 வெடிபொருள் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
எப்படி இருந்தாலும் தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவரும் தங்கியிருந்த அறையை உடைத்து காவல்துறையினர் சோதனை செய்தனர் அங்கிருந்து சில பொருட்களையும் கைப்பற்றினர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.