அரபுநாடுகள் இடும் பிச்சைக்கு பழகிப் போனவர்கள்..: புலம்பெயர் தமிழரின் வேதனைப் பதிவு!

உரத்த சிந்தனை புகார் பெட்டி

srilanka blast - 2026

இலங்கையில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் தொடர் குண்டு வெடிப்புக்களுக்கு மேல் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர்கள் பொறுப்புக் கூறவேண்டும்.

மேல் மாகாண ஆளுநர் #அசாத்_சாலி, மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் #ஹிஸ்புல்லாவை தனிப்பட்ட ரீதியாக சந்தித்த அரேபிய தேசத்தவர்களின் பின்னணிகள் ஆராயப்படவேண்டும்.

சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக அமைச்சர் #பைசர்_முஸ்தபாவின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்ததும் அவரை விடுவிக்க கோரி கொழும்பில் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அடிக்கடி இலங்கையில் இரத்த ஆறு ஓடும் இரத்த ஆறு ஓடும் என எச்சரித்த #ரிஷாட்_பதூதீனும் விசாரணைக்கு உற்படுத்தப்பட வேண்டும். இஸ்லாமிய தீவிரவாதத்தின் மையப்புள்ளியாக இலங்கையை மாற்றியமைக்கும் செயற்திட்டத்தில் தீவிரவாதிகள் முழுமையாக வெற்றியடைந்துள்ளனர் என்பதை இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் கோடிட்டுக்காட்டுகிறது.

புனித நாளில் படுகொலையான 200 க்கும் மேற்பட்ட தமிழ் சிங்கள சொந்தங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கின்றேன். இச்சம்பவத்தில் தொடர்புடைய எவரும் கைதுசெய்யப்படவோ அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கவோ இந்த அரசாங்கம் முயலப்போவதில்லை ஏனெனில் அரேபிய நாடுகள் இடும் #பிச்சைக்கு இவர்கள் பழகிப்போய்விட்டனர்.

  • சுப்ரமணிய பிரபா
    (புலம் பெயர்ந்த ஈழ தமிழர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.