பாகிஸ்தானை எச்சரித்த மோடி: எங்கள் அணுகுண்டுகள் தீபாவளிக்கு வெடிப்பதற்காக வைத்திருக்கவில்லை!

Published:

Modi - 2026

பாகிஸ்தானின் மிரட்டல்களுக்கு அச்சப்படும் நிலையை இந்தியா நிறுத்திவிட்டது. பாகிஸ்தான் எப்போதும் எங்களிடம் அணுகுண்டு இருக்கிறது என கூறிவருகிறது. இந்தியா வைத்திருப்பது மட்டும் என்ன? தீபாவளிக்கு வெடிக்கவா அணுகுண்டை வைத்திருக்கிறோம்? என்று கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி.

மேலும், காஷ்மீர் பிரச்னையை தீர்க்க கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை சர்வதேச அழுத்தத்தின் காரணமாக அப்போதைய (1972) காங்கிரஸ் அரசு தவறவிட்டது… என்று கூறினார் பிரதமர் மோடி.

பார்மரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 1972ம் வருட போரின் போது, நம்மிடம் சிறைப்பட்ட 90ஆயிரம் போர்க் கைதிகளை, காஷ்மீர் பிரச்னையைத் தீர்த்துவிட்டு பின்னர் ஒப்படைத்திருக்க வேண்டும். அப்போதைய காங்கிரஸ் அரசு சர்வதேச அழுத்தத்துக்கு அடிபணிந்து, நல்ல வாய்ப்பை கோட்டை விட்டது.

1971ம் வருட போரின் போது, பாகிஸ்தானின் பெரும் பகுதி நிலம் நம்வசம் இருந்தது. பாகிஸ்தான் ராணுவம் நம் கைக்குள் இருந்தது. இந்திய ராணுவம் அனைத்தையும் திட்டமிட்டு சரியாக வசப்படுத்தியிருந்தது. ஆனால், அந்த அருமையான வாய்ப்பை காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் காங்கிரஸ் அரசு பயன்படுத்தாமல் கோட்டை விட்டது… என்று கூறினார் மோடி.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

அந்த வாய்ப்பை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி தீர்வு கண்டிருந்தால், பாகிஸ்தானால் இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் இத்தகைய பேராபத்துக்களை நாம் தவிர்த்திருக்கலாம். காங்கிரஸுக்கு எப்போதுமே தேசியவாதம் என்பது ஒரு பொருட்டாக இருந்ததே இல்லை.

வெறுமனே எங்களிடமும் அணு ஆயுதம் உள்ளது என்று மிரட்டும் பாகிஸ்தானின் மிரட்டலை இந்தியா ஒரு போதும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது. நாங்கள் உங்கள் மீது அணுகுண்டு வீசுவோம் என்று பாகிஸ்தான் மிரட்டினால்…? நாம் என்ன செய்வோம்..?! நாம் என்ன நம்மிடம் இருக்கும் அணு ஆயுதங்களை தீபாவளிக்கு வெடிக்கவா வைத்திருக்கிறோம்?! என்று கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி!

மேலும், பாலாகோட் பதிலடி, 2016ல் மேற்கொள்ளப்பட்ட சர்ஜிகல் ஸ்ட்ரைக்.. ஆகியவற்றைக் குறிப்பிட்டு, நாம் என்ன பாகிஸ்தானுடன் அறிவிக்கப் பட்ட போரையா தொடுத்தோம்?! இதுதான் வலிமையான அரசு என்பது! நாம் பயங்கரவாதிகளுக்கு பயத்தை தோற்றுவித்திருக்கிறோம்… என்று பேசினார்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img