துறையூர் திருவிழா கூட்ட நெரிசலில் உயிரிழந்த 7 பேர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரண உதவி!

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்

modi coim batore - 2026

சென்னை: திருச்சி துறையூரை அடுத்த முத்தையாம்பாளையத்தில் நடந்த கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த 7 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ள இரங்கல் செய்தியில்…

திருச்சி துறையூரை அடுத்த முத்தையாம்பாளையத்தில் நடந்த கோவில் திருவிழாவில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்…. என்று கூறியுள்ள மோடி, இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

அதேபோல், இந்த நிகழ்வுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.