
ரஜினிகாந்த் கட்சியால் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தான் ஆபத்து என மதுரையில் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
மதுரையில் தமிழக பாஜக.,வின் மூத்த தலைவர்களின் ஒருவரான ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்
“சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுக தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறது. திமுக வேளாண் சட்டங்கள் குறித்து தவறாக பிரச்சாரம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
திமுக, காங்கிரஸ், விசிக ஆகிய தீய சக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். வட மாநிலங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஒப்பந்த பண்ணை முறை நடைமுறையில் உள்ளது.
வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து தெரியாமல் பேசுபவர்கள் முட்டாள்கள். வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து தெரிந்தும் பேசுபவர்கள் அயோக்கியர்கள். திமுக விவசாயிகளைக் கொலை செய்துள்ளது!
ஜனவரி 31 வரை மட்டுமே ஆ.ராசாவால் பேச முடியும். 2 ஜி தீர்ப்பு விரைவில் வர உள்ளதை ஆ.ராசா நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்! திமுக கொள்ளை, கொலைகாரக் கூட்டம்! 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளை காப்பற்ற கொண்டு வரப்பட்ட சட்டம், திமுகவுக்கு மக்கள் சட்டமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.
1996 ல் ரஜினிகாந்த் திமுகவுக்கு குரல் கொடுத்தவர், ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என கூறினார்.
ரஜினிகாந்த் கட்சியால் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தான் ஆபத்து! ரஜினிகாந்த் 2017 ஆம் ஆண்டே கட்சி தொடங்குவது குறித்து முடிவு அறிவித்து இருந்தார். ரஜினிகாந்த் சுயமாக சிந்திக்கக் கூடியவர். ரஜினிகாந்த்தை குறைத்து மதிப்பிடக் கூடாது! அமித் ஷா வருகையால் ரஜினிகாந்த் கட்சி தொடங்க வில்லை!” எனக் கூறினார்!