எஸ்.ஏ.சந்திரசேகரின் வில்லங்கம்; அரசியலுக்கு நங்கூரம் போடும் விஜய்! டிவிட்டரில் ட்ரெண்ட் ஆன #கதறும்_ரோகினி

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தான் ஆதரிக்கவில்லை என்று கூறும் டிராபிக் ராமசாமி, நடிகர்கள் அரசியலுக்கு வருவதை தாம் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். ஆனால்

டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது  இது ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்குமான இன்னொரு டிவிட்டர் யுத்தமாக மாறி வருகிறது. ரஜினியை முன்வைத்து திரையுலகில் வளர்ந்த விஜய், எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி அரசியலில் தலை காட்டுவதாக ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்..

விஜய் பிறந்த நாளுக்கு சென்னை ரோஹினி தியேட்டரில் விழா கொண்டாடிய ரசிகர்கள், நடிகர் அஜித்தையும், அவரது குடும்பத்தாரையும் கேவலமாகப் பேசியதாகவும், அவ்வாறு பேசிய ரசிகர் ஒருவர் விஜய்யுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டதையும் விமர்சித்து அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் கடுமையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில், ரஜினியின் காலா பட போஸ்டரை கிழித்து விட்டு, அதன் மீது விஜய் பிறந்த நாள் போஸ்டரை ஒட்டி, ரஜினி குறித்து விமர்சித்துப் பேசியதும் ரசிகர்கள் மத்தியில் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

விஜய் ரசிகர்களை வெச்சி செய்யும் டிவிட்டர் ட்ரெண்ட்டாக, ரஜினி,அஜித்தைக் காயப்படுத்திய விஜய் ரசிகர்களுக்கு பதிலடி தருவதாக இந்த  என்று ட்ரெண்ட் ஆகி விட்டது.

அடுத்த விவகாரமாக, இதில் டிராபிக் ராமசாமி படம் ஆகியுள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகர் எடுத்துவரும் டிராபிக் ராமசாமி படம் அவரை வேறு விதத்தில் சித்திரித்து, நடிகர் விஜய்க்கு அரசியல் நங்கூரம் இடும் வகையில் செல்கிறது என்று, புகார் கூறுகிறார் அவருடன் உதவியாளராக இருக்கும் பாத்திமா என்பவர். நடிகர் விஜய் அரசியலுக்கு டிராபிக் ராமசாமி பலிகடா ஆகிவிட்டார் என்பது அவரது குற்றச்சாட்டு. 

 

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தான் ஆதரிக்கவில்லை என்று கூறும் டிராபிக் ராமசாமி, நடிகர்கள் அரசியலுக்கு வருவதை தாம் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், அரசியலுக்கு அச்சாரம் போடும் நடிகர் விஜய், தனது சினிமா புகழை முன்வைத்து அதிகாரத்தைப் பிடித்துவிட திட்டமிட்டு வேலைகளைச் செய்து வருகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

நடிகர் விஜய், தனது பிறந்த நாளுக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஊக்கப்படுத்திய செயலை விமர்சித்து டிவீட்கள் பறக்கின்றன. விஜய் ரசிகர்களுக்கும் அவர்களின் செயல்பாடுகளை எதிர்ப்பவர்களுக்குமான கருத்துப் போர்க் களமாக டிவிட்டர் பக்கம் மாறியிருக்கிறது. அதை இந்த காட்டுகிறது.