மாதம் ரூ.6 ஆயிரம் கொடுப்பது எப்படி தெரியுமா? ப.சிதம்பரம் விளக்கம்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

chidambaram - 2026

ராகுல் காந்தியின் குறைந்த பட்ச வருமானம் அளிக்கும் திட்டம் எப்படி செயல் படுத்தப் படவிருக்கிறது என்பது குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்தார்.

ராகுல் காந்தி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் மாதந்தோறும் வழங்கும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விளக்கம் அளித்தார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ப. சிதம்பரம், ஏழைக் குடும்பங்களுக்கு 72 ஆயிரம் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த வல்லுநர் குழு ஒன்று உருவாக்கப்படும். இந்தப் புதிய திட்டம் நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படும்.

முறைகேடுகளைத் தடுக்க ஏழைகள் அடையாளம் காணப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்படும். ராகுல் காந்தியின் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தால் இந்தியாவில் சுமார் 5 கோடி குடும்பங்கள் பயன்பெறும்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.