பொள்ளாச்சி திகில்! திருநாவுக்கரசு வீட்டின் பின்புறத்தில் சிறுமி உடல் புதைக்கப் பட்டதாக ‘ஆடியோ’!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் கோவை சற்றுமுன்

pollachi issue - 2026

பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவங்களில் திகில் தகவலாக, இந்த விவகாரத்தில் கைது செய்யப் பட்டுள்ள திருநாவுக்கரசு என்பவரின் வீட்டின் பின் புறத்தில் சிறுமியின் உடல் புதைக்கப் பட்டுள்ளதாக ஒரு பெண்ணின் அழுகுரலில் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர், திருநாவுக்கரசுவின் கும்பலில் மொத்தம் 8 அல்லது 9 பேர் இருக்கின்றார்கள்.

நாங்கள் நான்கு பேர் அவனிடம் சிக்கியிருந்தோம். அந்த கும்பலில் இருந்து பலர் தப்பித்து வெளியே ஓடிவிட்டிடார்கள். நாங்கள் சிக்கியிருந்த போது வயதுக்கு வராத சின்னப் பெண் அவர்களிடம் சிக்கிக் கொண்டாள். அவளை இரவு முழுதும் அந்த கும்பல் சிதைத்தது.

அந்த சிறுமி இரவு முழுதும் அத கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட்டார். அந்த சிறுமியின் சடலத்தை திருநாவுக்கரசு வீட்டின் பின்புறத்தில் புதைத்துவிட்டனர்.., என்று அழுதவாறு அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

இது இந்தச் சம்பவத்தில் மேலும் திகில் ஊட்டியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.