பொதுக்கூட்டத்துக்கு மைதானத்தை தர மறுத்தார் மம்தா! மாற்றிக் கொண்டார் பிரதமர் மோடி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

modi photo - 2026

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதாக திட்டமிடப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ஒன்றுக்கு மம்தா பானர்ஜி இடம் தர மறுத்துவிட்டார்! இதையடுத்து ஏப்ரல் மூன்றாம் தேதி அதே நாளில் வேறு ஒரு மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

அதே நாளில் வேறு ஒரு மைதானத்தில் பொதுக் கூட்டத்தை நடத்திக் கொள்ள அனுமதி பெற்றது பாஜக இந்தப் புதிய இடம் புதிய ஜல்பைகுரி ரயில்வே நிலையத்துக்கு அடுத்து உள்ள மிகப் பெரிய மைதானம் என்று சனிக்கிழமை பேசிய பாரதிய ஜனதா கட்சியின் டார்ஜிலிங் மாவட்ட தலைவர் அவ்ஜித் ராய் சவுத்ரி கூறினார்

பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதாக இருந்த மாநாட்டுக்கு இடம் தர மறுத்துவிட்டது உள்ளூர் நிர்வாகம். மேலும் அனுமதி தரவும் மறுத்துவிட்டது! இந்நிலையில் நாங்கள் வேறு மைதானத்தை அவசர கதியில் பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்! இதை அடுத்து வேறொரு மைதானத்தை நாங்கள் கண்டறிந்து அதற்கான அனுமதியை பெற்று உள்ளோம் என்று பாஜக மாநில தலைவர் திலீப் கூறியுள்ளார்!

முன்னதாக பாரதிய ஜனதா கட்சி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் இந்த மாநாட்டுக்காக சிலிகுரி ஜல்பைகுரி வளர்ச்சி முகமையின் மைதானத்தைக் கேட்டிருந்தது! இது மாநிலத்தின் அனுமதி வரையறைக்குள் வருகிறது! ஆனால் பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கொடுக்க மாநில நிர்வாகம் மறுத்துவிட்டது! இதையடுத்து ஜல்பைகுரி ரயில்வே நிலையத்துக்கு சொந்தமான வேறு ஒரு பெரிய மைதானத்தில் பொதுக்கூட்டத்துக்கான அனுமதியைப் பெற்றுள்ளது பாஜக

இதேபோன்று பொதுக்கூட்ட அனுமதி மறுப்பு இடம் தர மறுப்பு ஆகியவை முன்னரும் நடந்துள்ளன! ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளால் மாநிலத்தில் பாஜக வெற்றி பெறுவதையும் வளர்ச்சி அடைவதையும் மாநில திரிணமூல் காங்கிரஸ் அரசால் தடுக்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் கோஸ் கூறினார்

இதையடுத்து பிரதமர் மோடி கலந்து கொள்ளும் இரண்டு அடுத்தடுத்த தேர்தல் பொதுக்கூட்டங்கள் ஏப்ரல் மூன்றாம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது முதல் கூட்டம் இங்கும் அடுத்த கூட்டம் கொல்கத்தா ப்ரிகேட் பரேடு கிரவுண்டிலும் நடைபெற இருக்கிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.