கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் காரணமானதாகக் கூறப்படும், தப்ளீக் இ ஜமாத்தினர் தில்லி அரசின் கட்டுப்பாட்டையும் உத்தரவையும் மதிக்காமல் செயல்பட்டது உறுதியாகி உள்ளது. அதே நேரம் ஊரடங்கால் சொந்த ஊர்களுக்குத் திரும்ப இயலாமல் தவித்ததே பலர் தில்லியில் தங்கியிருக்க காரணம் என தப்ளீக் ஜமாத் நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக, 200 பேருக்கு அதிகமானோர் ஒரே இடத்தில் கூடக்கூடாது என கடந்த 13 ஆம் தேதி தில்லி அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் அதே நாள் தப்ளீக் ஜமாத்தை சேர்ந்த 3400 பேர் தில்லி நிசாமுத்தீன் மர்கசில் கூடினர். இந்த மர்கசில் பங்கேற்று தெலங்காணா சென்ற இந்தோனேசியர்கள் 10 பேருக்கு கடந்த 20 ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து 1500 பேர் புறப்பட்டுச் சென்றனர்.
24 ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்த நிலையில், மர்கசில் இருந்து 1000 பேரை வெளியேற்ற அனுமதி கோரி தப்ளீக் நிர்வாகம் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. அதற்கு தில்லி அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே அங்கு தங்கியிருந்து ஸ்ரீநகர் திரும்பிய ஒருவர் 26 ஆம் தேதி கொரோனாவுக்கு உயிரிழந்தார். இதை அடுத்து 27 ஆம் தேதி மர்கசுக்கு விரைந்த அதிகாரிகள் கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட 39 பேரை இரண்டு நாட்களாக அகற்றி தனிமை வார்டுகளில் சேர்த்தனர்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து சமூகத் தளங்களில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நோயின் வீரியத்தை உணர்ந்த பிறகும் வெளிநாட்டு இஸ்லாமியர்களை உள்ளுரில் தங்க வைத்திருப்பதும், அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருப்பதும் எந்த விதமான மனநிலை என்று தெரியவில்லை! தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்சிலர் மருத்துவ பரிசோதனை செய்ய ஒத்துழைப்பு இல்லை.. தனிபடுத்த முயன்றாலும் காவல்துறை மற்றும் சுகாதார துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர் என செய்திகள் வருகின்றன …
உண்மையான நிலவரம் இப்படி இருக்கையில் தேவையில்லாமல் சிவராத்திரி நிகழ்ச்சிகளை இதில் இழுத்து இதை மத ரீதியாக திசை திருப்பி வழக்கம்போல மோடி, எடப்பாடி பழனிச்சாமி முஸ்லீம்களுக்கு எதிராக இப்படி செய்கிறார்கள் என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்…
இரு மாதங்களுக்கு முன் இதே தப்லீக் மாநாடு தமிழகத்தில் நடத்தப்பட்டபோது தமிழக அரசே இலவச நீர், மின்சாரம், சாலை,போக்குவரத்து . டோல் கட்டண விலக்கு , பாதுகாப்பு என உதவியது மறந்துவிட்டதா? அதன் நிர்வாகிகளே எடப்பாடியரை சந்தித்து நன்றியும் தெரிவித்தனரே என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தோர் ஆகியோரில் பெரும்பாலானோர் இந்த தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் தாம் என்பது உறுதியாகியுள்ளது…. அந்த உண்மையினை மறைப்பதற்கு அந்த மதத்தைச் சேர்ந்தவர்களும்… சில அரசியல்கட்சிகளும் மதச்சாயம் கொண்ட கட்சியினரோடு இது மாதிரி அபத்தங்களைப் பரப்பி வருகிறார்கள்…. ஜக்கி மாநாட்டில் கலந்து கொண்டோருக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் கூட இங்கு யாரும் வரக்கூடாது… சோதனை செய்யக் கூடாது என அதிகாரிகளை மிரட்டுவதும் விரட்டி அடிப்பதும் எந்த இந்துவும் செய்யவில்லை…. இது வேண்டுமென்றே செய்யப்படும் சதி…. இதற்குச் சில இந்துக்களுமே துணை போவது வெட்கக் கேடு என்று மனம் பொருமி கருத்து தெரிவிக்கின்றனர்.