தமிழிசைக்கு ஓட்டு போடுங்க: குலசை தசரா குழுக்கள் கடிதம்!

சற்றுமுன் தமிழகம் நெல்லை

tamilisai 2 - 2026

தமிழிசைக்கு குலசேகர பட்டனம் தசரா குழுக்கள் ஆதரவு தெரிவித் துள்ளன-

குலசேகர பட்டனம் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். இந்தியாவில் தசரா பண்டிகையை விமரிசையாக கொண்டாடி வரும் மைசூருக்கு
அடுத்து குலசேகர பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் தான் தசரா பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது

இங்கு நடைபெறும் தசரா பண்டிகைக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இந்தி
யாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தசரா விழாவினை காண மக்கள் வருவது வழக்கம்.

சுமார் 15 லட்சம் பேர் இந்த தசரா விழாவினை காண வருவது வழக்கம். அதனால் ஒவ்வொரு
ஊர்களிலும் தசராவுக்கு மக்களை அழைத்துச் சென்று வர தசரா குழு என்கிற பெயரில் பல அமைப்புகள் இருக்கின்றன.

இந்த அமைப்புகளை ஒருங்கிணைப்பு செய்வதற்கும் ஒரு சங்கம் இருக்கிறது.

அந்த சங்கத்தில் இருந்து தூத்துக்குடியில் வாழும் தசரா குழுக்களுக்கு கனிமொழிக்கு ஓட்டு போடாதீர்கள். அவர் திருப்பதி பெருமாளையே பொம்மை என்று கூறியவர் இவர் வெற்றி பெற்றால் தூத்துக்குடியில் நம்முடைய கலாச்சாரத்தை சிதைத்து விடுவார்

IMG 20190406 WA0045 - 2026

அதனால் நம்முடைய கலாச்சாரத்தை கட்டி காப்பாற்றி வரும் பிஜேபி கட்சிக்கு ஆதரவு அளித்து அதன் வேட்பாளர் தமிழிசைக்கு வாக்கு களை அளிக்கும் படி தசரா குழுக்களுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

தகவல்: விஜயகுமார் அருணகிரி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.