
மதுரை: மதுரையில் சிமிண்ட் விலை ஏகத்துக்கும் உயர்ந்திருக்கிறது. ஆட்கள் இல்லை. ஆயினும் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.
மதுரை புறநகர் பகுதிகளில் நெடு நாளைக்கு பிறகு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஊரடங்கால் சிமெண்ட் மூட்டை விலையானது ரூ. 300..லிருந்து ரூ. 400 ஆக உயர்ந்தும் கூட, கட்டுமான பணிகள் தொடர்ந்து வருகிறது.
மேலும் லாரி வாடகை உயரந்து கூட, கட்டுமான பணிகளில் சுணக்கம் ஏற்படவில்லையாம். மதுரை அண்ணாநகர், மேலமடை, வண்டியூர், தாசில்தார் நகர், வரிச்சூர், பூவந்தி ஆகிய பகுதிகளில் குறைவான தொழிலாளர்களை கொண்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
பஸ்போக்குவரத்து இல்லாததால், கட்டிடப்பணிக்கு உள்ளூர் பணி ஆட்களை ஓப்பந்தக்காரர் நம்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை கருப்பாயூரணி பகுதியில் வெள்ளிக்கிழமை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு வெகுஜரூராக வேலைகள் நடைபெற்று வருகின்றன.
- செய்தி: ரவிசந்திரன், மதுரை