பொண்டாட்டினா வேலைக்காரியா? சிம்பு!

சினி நியூஸ் சினிமா
simbu2
simbu

சிம்புவின் வாழ்வில் இரண்டு முறை காதல் வந்தது. வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் சிம்புவுக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் அந்த காதல் நிலைக்கவில்லை. அதன் பிறகு வாலு படத்தில் நடித்தபோது சிம்புவும், ஹன்சிகாவும் காதலித்தார்கள். அந்த காதல் துவங்கிய வேகத்தில் முறிந்துவிட்டது. ஆனால் அந்த காதல் முறிவுக்கு தானோ, ஹன்சிகாவோ காரணம் இல்லை என்றார் சிம்பு. அப்படி என்றால் அந்த காதல் முறிய யார் தான் காரணம் என்று கேட்ட ரசிகர்களின் கேள்விக்கு இன்று வரை சரியான பதில் கிடைக்கவில்லை.

சிம்புவின் தம்பிக்கும், தங்கைக்கும் திருமணமாகிவிட்டது. சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்பது தான் அவரின் பெற்றோரின் கவலையே. சிம்புவுக்காக அவர்களும் தொடர்ந்து பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவருக்கு ஏற்ற பெண் இதுவரை அமையவில்லை. பெண் கிடைக்கவில்லை என்கிற கவலை சிம்புவுக்கு இல்லை. அவர் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சிம்புனா வம்பு என்று பேசியவர்கள் கண் முன்பே ஆளே மாறிப் போய் அநியாயத்திற்கு புது மனிதராகிவிட்டார். சிம்பு சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்ததாக சரித்திரமே கிடையாது என்று கூறியவர்கள் வியக்கும்படி குறித்த நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வந்து பொறுமையுடன் நடித்துக் கொடுக்கிறார். சிம்பு நல்லபடியாக ஆகிவிட்டார் ஆனால் திருமணம் செய்தால் தன்னை நம்பி வரும் பெண்ணை பத்திரமாக பார்த்துக் கொள்வாரா என்று பேசியவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் சிம்பு சமைப்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால் தன்னை திருமணம் செய்து கொண்டு வரும் பெண் வேலை செய்வதற்காக ஒன்றும் வரவில்லை. அவருக்கு விருப்பம் இருந்தால் சமைக்கட்டும். வாழ்க்கைத் துணையாக வருகிறார். வேலைக்காரியாக வரவில்லை. நான் என் மனைவியை அப்படி ட்ரீட் பண்ண மாட்டேன். என் பொண்டாட்டி சந்தோஷமாக இருக்க வேண்டும் என தான் நினைக்கிறேன் என்று சிம்பு அந்த வீடியோவில் கூறியதை கேட்டு ரசிகைகள் அசந்துவிட்டனர். ரசிகர்களோ, அண்ணி ரொம்ப கொடுத்து வைத்தவர் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.