சென்னை சூப்பர் கிங்க்ஸின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

csk team - 2026

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினர் தங்களது புத்தாண்டு நல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சிஎஸ்கே வீரர்கள் தங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடி வரும் பஞ்சாப் வீரர் ஹர்பஜன் சிங், கிட்டத்தட்ட தமிழராகவே மாறிவிட்டார். அடிக்கடி தமிழில் டிவிட் போடுவதும், தமிழ்க் கலாசாரப் படி வேட்டி அணிந்து போஸ் கொடுப்பதும் என படங்களைப் பதிவிட்டு அதிரடி காட்டுவார்.

தற்போது, தமிழிலேயே  டிவிட்டர் பதிவிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவரது டிவிட்டர் பதிவில்…. பாசமும்,நேசமும் இனிதோடு, நாளைய சூரியவிடியலின் துணையோடு,பல வெற்றிப்படிகளின் கனவோடு,கல்வியும் கலையும் அறிவோடு,உண்மையும் உழைப்பும் உயிரோடு,உறுதிமிகு தமிழா விழிப்போடு,நாளைய உலகம் வெல்க துணிவோடு.தமிழோடும்,தமிழரோடும் உறவாடு!நல் உறவோடு! வாழ்த்துக்கள் அன்பு சொந்தங்களே! என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.