கிருஷ்ணகிரியில் புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடத்தப்பட்ட விழிப்பு உணர்வு மராத்தான் போட்டியில், இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நேச்சுரல் யோகா சங்கமும் இணைந்து, கிருஷ்ணகிரியில் புகையிலை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மராத்தான் போடடி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கிலிருந்து துவங்கிய இந்த மாரத்தான் போட்டியை, கிருஷ்ணகிரி தாலுகா காவல் ஆய்வாளர் சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஐந்து பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், ஆறு கிலோ மீட்டர் முதல் 10 கிலோ மீட்டர் வரை போட்டி வரை பேட்டியின் தூரம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
பின்னர், மரத்தின் போட்டியின் ஒவ்வெரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
புகையிலை மற்றும பிளஸ்டிக் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு மாரத்தன் போட்டியில், மாவட்டத்தின் பல்வேறுப் பகுதிகளில் இருந்து சுமார் இராண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.




