சென்னையில் 3 தொகுதிகளில் நாளை விஜயகாந்த் பிரசாரம்: தேமுதிக அறிவிப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

rajini vijayakanth - 2026

2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. உடல் நலம் குன்றி ஓய்வில் இருந்துவரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்த முறை அவசியம் பிரசாரம் செய்வார் என அக்கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், தேமுதிக வெளியிட்ட வீடியோவில், பிரசாரத்திற்கு வருவேன் என்று விஜயகாந்த் பேசியிருந்தார். இப்போது அவர் சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜை ஆதரித்தும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களான அதிமுக தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் பாமக மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் சாம்பாலை ஆதரித்தும் நாளை (15.04.2019) மாலை 4 மணிக்கு மூன்று நாடாளுமன்றத் தொகுதியிலும் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.