
கொரோனா 2019 இல் ஆரம்பித்த போது சிருங்கேரி ஜகத்குரு மஹாசன்னிதானம் அவர்களால் எழுதப்பட்ட ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி ஸ்தோத்திரம் உலகெங்கும் உள்ள பக்தர்களால் பாராயணம் செய்யப்பட்டது.

ஸ்லோகத்தின் பொருள்:
அம்மா துர்க்கையே! இதுவரைக்கும் எல்லா ஆபத்துக்களிலிருந்தும் நாடடைக் காப்பாற்றிவிட்டு இப்பொழுது எதனால் பாராமுகத்தை வைத்துக் கொண்டிருக்கிறாய்? || 1 ||
பல தவறுகளை குழந்தைகள் அடிக்கடி செய்து கொண்டிருப்பார்கள். அவை அனைத்தையும் உலகத்தில் தாய் ஒருத்தியன்றி வேறு யார்
பொறுப்பார்கள்? || 2 ||
ஹே துர்க்கையே! கஷ்டத்தில் இருக்கும் புத்திரர்களின் மேல் பாராமுகத்துடன் இருக்காதே, இருக்காதே. உலகத்தில் தாயினால் கைவிடப்பட்ட குழந்தைகளை வேறு யார் தான் கையில்
எடுப்பார்கள் அம்மா? 11 3 11
‘ஹே ஜகன்மாதாவே! இனிமேலாவது எப்பொழுதும் இந்த நாட்டில் நோய் முதலான பெரிய ஆபத்துகள் இல்லாதவண்ணம் நிரந்தரமான கருணையைப் புரிவாய்” என்ற என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றுவாய். || 4 ||
பாபமற்றவர்களைக் காப்பாற்றுவதில் திறமை வாய்ந்த தேவதைகள் பலர் உள்ளனர். உலகத்தில் பாபம் செய்த ஜனங்களைக் காப்பாற்றுவதில் திறமையுள்ளவளாக உன்னைத் தவிர எவரையும் கண்டதில்லை. || 5 ||

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக யூட்யூப் குருபாந்தவா சேனல் மூலமாக நேரடி ஒளிபரப்பு முறையில் நித்ய பாராயணமாக தினமும் 3.30 மணிக்கு நடைப்பெற்று வருகிறது.
தற்பொழுது 2ஆம் அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் ஜகத்குருவின் வழிகாட்டுதலின் படி ஒருநாள் அகண்ட பாராயணமாக இன்று நடைபெற்றது.

இதில் உலகெங்கும் உள்ள மக்கள் யூட்யூப் ஆன்லைனில் கலந்து கொண்டு இந்த கடுமையான சூழலில் இருந்து உலக மக்களை காத்து அருளுமாறு துர்கா மாதாவிடம் கூட்டு பிரார்த்தனை செய்தார்கள்.

மேலும் இந்த சேனலில் நாராயணியமும், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும் அடுத்தடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறயுள்ளது.