
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியங்காடு ஊராட்சியில் உள்ள ஆதிமாதையனூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அங்கு இருக்கும் பொதுமக்கள் 59 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் நேற்றைய தினம் அதன் முடிவுகள் வெளிவந்தது. இதில் ஆதிமாதையனூர் கிராமத்தைச் சேர்ந்த 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதே போல வெள்ளியங்காடு பகுதியில் நேற்று முன்தினம் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 25 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளியங்காடு பகுதியில் நேற்று முன்தினம் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 25 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளியங்காடு ஊராட்சியில் உள்ள ஆதிமாதையனூர் மேட்டுப்பாளையம் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் A.K.செல்வராஜின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே செல்வராஜ் இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஊருக்குள் செல்லும் அனைத்து வழிகளையும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்புகள் வைத்துள்ளது.
- சரண்