ஒடிஸா ஸ்பெஷல்: சென்னா போடா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
chenna poda
chenna poda

சென்னா போடா
ஒடிசாவில் பிரபலமான ஒரு சுவையான இனிப்பு சென்னா போடா…. இது சென்னா அல்லது புதிய பன்னீர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பன்னீர் கேக் என்றும் அழைக்கலாம்.

தேவையான பொருட்கள்

250 கிராம் பன்னீர்
3/4 கப் சர்க்கரை
3/4 கப் ரவை
10 முந்திரி
10 திராட்சை
4 பாதாம்
4 பிஸ்தா
சிறிது ஏலக்காய்த்தூள்
செய்முறை
பன்னீரை நன்றாக திருப்பிக் கொள்ளவும் பிறகு இதனுடன் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கைகளால் நன்றாக பிசைந்து கொள்ளவும்

சர்க்கரை கரைந்த பிறகு இதில் ரவை சேர்த்து 5 நிமிடம் நன்றாக பிசையவும் பிறகு இதில் ஏலக்காய்த்தூள், திராட்சை, முந்திரி சேர்த்து மீண்டும் நன்றாக பிசையவும்

இறுதியாக நெய் நறுக்கிய பாதாம் முந்திரி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் பிறகு கேக் டின்னில் எண்ணெய் தேய்த்து பட்டர் சீட்டை வைத்து தயாரித்து வைத்திருக்கும் பன்னீர் கலவையை அதில் சேர்த்து சரிசம படுத்திக் கொள்ளவும்

அவனை 180 டிகிரி செல்சியஸ் பிரிஹீட் செய்து கொள்ளவும் பிறகு தயாரித்து வைத்திருக்கும் கலவையை அதனுள் வைத்து 40 நிமிடம் வைக்கவும்.. கடாயில் செய்வதற்கு அடி கனமான கடாயில் உப்பு சேர்த்து 15 நிமிடம் பிரிஹீட் செய்யவும் பிறகு இதனை உள் வைத்து 40 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.