கீழக்கரையில் காஷ்மீரைச் சேர்ந்த இருவர்… போலீஸார் விசாரணை!

Published:

tamilnadu police - 2026

கீழக்கரையில் தங்கியிருந்த காஷ்மீரைச் சேர்ந்த இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் தங்கியிருந்த காஷ்மீரைச் சேர்ந்த இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் காஷ்மீரைச் சேர்ந்த இம்ரான்ஹபீப், சையத் அகமது பீர் ஆகியோர் தங்கியிருந்து நிதி வசூல் செய்வதாக போலீசாருக்கு தெரியவந்தது. மேலும், அவர்கள், காஷ்மீரி, பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்ததால், போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள், தாங்கள் இருவரும் பள்ளிக் குழந்தைகளுக்கு நன்கொடை வசூலிக்க இங்கு வந்து தங்கியிருப்பதாக போலீஸாரிடம் கூறினராம். இது குறித்து போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img