கவிஞர் வைரமுத்து, தினமணி சார்பில் ராஜபாளையத்தில் நடந்த கருத்தரங்கில் பேசியபோது, ஆண்டாள் குறித்து அவதூறாகப் பேசினார். இதனால் அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை காலை ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் ஜீயர் ஸ்வாமி தலைமையில் திரளான மக்கள் கலந்து கொள்ள, போராட்டம் நடத்தப் பட்டது. வைரமுத்துவும் தினமணி ஆசிரியரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து கோயிலில், மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கோர வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பபட்டன. மேலும், இருவரும் கோயிலுக்கு வந்து கோயிலை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து, மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறினர்.
கோயிலை கூட்டிப் பெருக்கி மன்னிப்பு கேட்கவேண்டும்; வைரமுத்துவுக்கு ஸ்ரீவி., மக்கள் கண்டிப்பு
Popular Categories



