வைரமுத்து பேச்சுக்கு எதிர்ப்பு: புதுவையில் ஜீயர் கண்டன ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் ஸ்வாமி தலைமையில் திரளான மக்கள் கலந்து கொள்ள, போராட்டம் நடத்தப் பட்டது. 

கவிஞர் வைரமுத்து, தினமணி சார்பில் ராஜபாளையத்தில் நடந்த கருத்தரங்கில் பேசியபோது, ஆண்டாள் குறித்து அவதூறாகப் பேசினார். இதனால் அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை காலை புதுச்சேரியில் உள்ள தினமணி அலுவலகம் முன், மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் ஸ்வாமி தலைமையில் திரளான மக்கள் கலந்து கொள்ள, போராட்டம் நடத்தப் பட்டது.