ஏப்ரல் 22, 2021, 7:46 மணி வியாழக்கிழமை
More

  கொரோனா நோயாளி கணவனுக்கு உணவிற்கு நடுவே மதுவை மறைத்து கொடுத்த மனைவி!

  Screenshot_2020_0814_145736
  Screenshot_2020_0814_145736

  கொரோனா நோயாளிக்கு உணவில் மதுவை மறைத்து வைத்து வழங்கிய மனைவி மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டை அருகே 43 வயது நபருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு கோல்டன் ஜூபிலி விடுதி வளாகத்தில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு உணவு வழங்க இவருடைய மனைவி மதுவை பதுக்கி உணவில் வைத்து எடுத்து வந்துள்ளார்.

  madhu 3 - 1

  மதுவை அருந்திவிட்டு நோயாளி ஆபாசமாக பேசி பிற நோயாளிகளுக்கும் இடையூறு செய்துள்ளார். அங்கு பணியில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அப்பகுதி உள்ள கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து தகவல்களை பெற்று கிராம நிர்வாக அலுவலர் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணபதியிடம் புகார் அளித்தார்.

  இதனையடுத்து காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் நோயாளி மீதும் 38 வயதான இவரது மனைவியின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »