அடுத்த 48 மணி நேரத்தில் மழை.. வானிலை ஆய்வு மையம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
meteorological centre

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வட மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடற்கரை பகுதிகள் மணிக்கு 50 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.