October 26, 2021, 6:22 pm
More

  ARTICLE - SECTIONS

  ஆலயம் என்பது ஆத்திகம்; நினைவாலயம் என்பது நாத்திகம்! திமுக.,வை நோக்கிப் பாயும் அம்புகள்!

  இந்நிலையில், இந்த விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்று அமைச்சர் சாமிநாதன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

  bharatha matha ninaivalayam
  bharatha matha ninaivalayam

  திமுக.,வுக்கு விரைவில் நினைவாலயம் அமைக்கப்பட வாழ்த்துவோம் என்ற கருத்துடன் சமூகத் தளங்களிலும் பாஜக., வட்டாரத்திலும் பாரதமாதாவுக்கு அமைக்கப் பட்ட மண்டபம் குறித்த தகவல் பகிரப் பட்டு வருகின்றன.

  தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் சுப்ரமணிய சிவாவின் மணிமண்டபம் உள்ளது. இங்கே பாரத மாதாவுக்கு சிலை வைத்து, ஆலயம் அமைக்கப் பட வேண்டும் என்பது சுப்ரமணிய சிவாவின் கனவு. இதற்காக, தர்மபுரி பாப்பாரப்பட்டி பாரதபுரத்தில் 6 ஏக்கர் நிலம் வாங்கினார். அங்கே பாரதமாதா ஆலயம் அமைக்கப் படாதபாடுபட்டார். ஆனால் அவரால் அது இயலவில்லை. சிறிது காலத்திலேயே அவர் காலமானார். இதனால் பாரதமாதா ஆலயம் என்ற கனவு வெறும் கனவாகவே இருந்தது.

  இந்நிலையில் ரூ.1.5 கோடி செலவில், அதே பாரதபுரத்தில் பாரத மாதாவுக்கு தமிழக அரசு சார்பில் பாரதமாதா நினைவாலம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து ஆகஸ்ட் 1ம் தேதி செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

  ஆனால், பாரதமாதா நினைவாலயம் என்ற அந்தப் பெயர் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நினைவாலயம் என்பது பாரதமாதாவுக்கு எப்படி சரியாக வரும், யாரைக் கேட்டு இந்தப் பெயர் வைத்தார்கள், இதில் உள்நோக்கம் இருக்கிறது என்று பாஜக.,வினர் கொந்தளிந்துப் போயுள்ளனர்.

  இது குறித்து பாஜக., மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்த போது, சுப்ரமணிய சிவாவின் கனவு நிறைவேற நிறைய பேர் முயற்சி எடுத்தனர். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த குமரி அனந்தனும் முயற்சித்தார். அங்கிருக்கும் மக்களும், பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதன் விளைவாக, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 1.5 கோடி ரூபாய் மதிப்பில் பாரதபுரத்தில் பாரத மாதாவுக்கு ஆலயமும், அருகே நூலகமும் கட்டி முடிக்கப்பட்டது. அதைத் திறந்து வைப்பதற்குள் எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது.

  அரசுப் பணிகளுக்காக முதல்வர் ஸ்டாலின் தர்மபுரி செல்கிறார். அந்த நேரத்தில் இந்த ஆலயத்தை ஏன் திறக்கவில்லை என யாரும் கேள்வி எழுப்பக் கூடும் என்பதால் அவசர அவசரமாக அமைச்சர் சாமிநாதனை விட்டு இதனைத் திறந்து வைத்துள்ளனர். ஆனால், பாரதமாதா நினைவாலயம் என அரசுத் தரப்பில் குறிப்பிட்டுள்ளனர். இறந்தவர்களுக்கு தான் நினைவாலயம் கட்டப்படும். கோடிக்கணக்கானவர் மனங்களில் வாழும் தெய்வம் பாரதமாதாவை சாகடித்துள்ளனர். இது பாரத மாதாவை நேசிக்கும் இந்தியர்களுக்கு பெரும் தலைக்குனிவு… என்று குறிப்பிட்டுள்ளார்.


  சுப்பிரமணிய சிவாவின் கனவுப்படி பாரதமாதாவுக்கு கோவில் என திறக்க சென்ற திமுக அரசு ஒருவித தேசவிரோதத்தை செய்திருக்கின்றது

  bharatha matha
  bharatha matha

  “பாரத மாதா ஆலயம்” என அமையவேண்டிய ஆலயத்தை “பாரதமாதா நினைவாலயம்” என குதர்க்கமாக பெயரிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன, இதுகுறித்து பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றது

  ஆம் நிலைவாலயம் என்பது இறந்தோருக்கு நினைவாக எழுப்பபடும் விஷயம் என்பதால் பாரதமாதாவினை என்ன சொல்ல வருகின்றீர்கள் என தேசாபிமானிகள் கொந்தளிக்க தொடங்கிவிட்டார்கள்

  அமைச்சர் சாமிநாதன் இதுகுறித்து பரிசீலனை செய்யபடும் என அறிவித்திருக்கின்றார்

  உண்மையில் இது திமுகவின் திட்டமிட்ட தவறாக இருக்க முடியாது, பழக்க தோஷமாக இருக்கலாம்

  அவர்களை பொறுத்தவரை பார்ப்பானீய எதிர்ப்பு என்பது ஒரு பழைய நினைவு, அப்படியே திராவிட நாடு, தமிழீழநாடு என எல்லாமே நினைவு

  ஏன் தமிழன்னையினை கூட அவர்கள் ஏறேடுத்து பார்ப்பதில்லை. ஆங்கிலம் தமிழன்னை மேல் புல்டோசர் ஏற்றி விளையாடுகின்றது, இதனால் தமிழன்னையும் அவர்களுக்கு ஒரு நினைவு

  நீட் தேர்வு உள்பட ஏகபட்ட “நினைவுகள்” இப்படி அவர்களுக்கு உண்டு

  bharatha matha ninaivalayam2
  bharatha matha ninaivalayam2

  அந்த நினைவில் பாரதமாதாவினையும் நினைவாலய வகையில் பழக்க தோஷத்தில் சேர்த்துவிட்டார்கள், விரைவில் நல்ல செய்தி சொல்வார்கள் என எதிர்பார்ப்போம்

  அமைச்சர்கள் சர்ச்சை இழுப்பதும் பின் அவசரமாக பல்டி அடிப்பதும் இந்த ஆட்சியில் மிக வழமையான ஒன்று – என்று தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் பேஸ்புக் சமூகத் தளத்தில் எழுதும் ஸ்டான்லி ராஜன்!


  பாப்பாரபட்டியில் பாரத மாதா ‘நினைவாலயம்’, கவனிக்க. என்று தோன்றினள் என்றுணரா இயல்பினளாம் பாரத தாய்க்கு பிறப்பேது, இறப்பேது? அதென்ன ‘நினைவாலயம்’? ஒவ்வொரு செயலிலும் தேசபக்தியை, தமிழின வீரர்களை கொச்சைப்படுத்துகிறது திமுக சிற்றரசு. விரைவில் திமுகவுக்கு நினைவில்லம் அமைக்க சபதமேற்போம்… என்று சிலர் சமூகத் தளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.


  அட முட்டா பயலுவோலா !
  செத்தவங்களுக்கு தானே நினைவாலயம் கட்டுவாங்க
  பாரதமாதாவுக்கு ஆலயம் தானே கட்டனும்
  பாரதமாதாவை அவமதிப்பு செய்த முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்று குறிப்பிட்டுள்ளார் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன்.


  பாரதமாதா நினைவாலயம்??? இழிவுபடுத்தும் செயல்!
  சுதந்திர வீரர் சுப்ரமணிய சிவாவின் கனவு இதுதானா?
  விளக்கம் அளிக்கிறார் இந்துமுன்னணி மாநில அமைப்பாளர் திரு. பக்தன் அவர்கள்…

  இந்நிலையில், இந்த விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்று அமைச்சர் சாமிநாதன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

  சிலையும் ஆலயமும் நூலகமும் அமைக்கப்பட்டதே பாரத மாதாவுக்கு முக்கியத்துவமும் மரியாதையும் அளிக்கப்பட்டதால் தான். அதனால் பாரதமாதாவை போற்றும் வகையில், உடனடியாக திறப்பு விழா நடத்தப்பட்டது. விழா சிறப்பாகவே நடந்தது. பாரதமாதாவுக்கு எல்லாரும் மரியாதை கொடுப்பதை போல, அரசும் மரியாதை கொடுக்கிறது. போற்றுதலுக்குரிய இந்த விஷயத்துக்குள், எந்த உள்நோக்கமும் கிடையாது. அதனால், இதில் யாரும் அரசியலை புகுத்த வேண்டாம். பாரதமாதா நினைவாக ஒரு ஆலயம் என்பதை தான் நினைவாலயம் என அரசுத் தரப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே தவிர, அதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. இப்போது அதை வைத்து ஒரு சர்ச்சை அல்லது கோரிக்கை எழுகிறது என்றால் அரசுத் தரப்பில் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்… என்று கூறியுள்ளார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,589FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-