திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா! பஞ்சரத்ன கீர்த்தனையை தொடங்கி வைத்த ஆளுநர்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்

pancharatna governor e1557565651166 - 2026
திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. இதில், முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசை விழா கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் தொடர்ச்சியாக, இன்று காலை தியாகராஜ சுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த வழிபாடுகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டார்.

தொடர்ந்து ஆலய வளாகத்தில் பஞ்ச ரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார். நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி சங்கீத மும்மூர்த்திகளுக்கு புகழஞ்சலி செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.