திமுக.,வினருக்கு சொந்தமான ஹிந்தி கற்பிக்கும் பள்ளிகள்! பட்டியல் வெளியிட்டு ‘கவனித்த’ ஹெச்.ராஜா!

கல்வி சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

10 July31 H raja - 2026

திமுகவினருக்கு சொந்தமான ஹிந்தி மொழி கற்றுத் தரக்கூடிய பள்ளிகளின் விவரங்களை பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா நேற்று வெளியிட்டார்!

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில், இந்தி பேசாத மாநிலங்களில் ஐந்தாவது வகுப்பு முதல் மூன்றாவது மொழியாக இந்தி கற்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது!

இதற்கு திமுக உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்தி மொழியை மாணவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப மூன்றாவது மொழியாக அவர்களே தேர்வு செய்யும் வகையில் இந்த விவகாரம் திருத்தப்படுவதாக புதிய வரைவு அறிக்கையில் வெளியிடப்பட்டது!

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொள்ள வசதி ஏற்பட்டால் இவர்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடும்! இப்போது இவர்கள் எதிர்ப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, திமுகவினருக்கு சொந்தமான ஹிந்தி மொழி கற்றுத் தரக்கூடிய பள்ளிகளின் விவரங்களை பட்டியலாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்!

hindi schools dmk1 - 2026 hindi schools dmk2 - 2026 hindi schools dmk3 - 2026

ஹிந்தி மொழி தொடர்பாக அண்மையில் எழுந்த சர்ச்சைக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகளுடைய தவறே காரணம் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது!

வரைவு அறிக்கையில் கடந்த ஜனவரி மாதமே திருத்தம் செய்யப்பட்டது; எனினும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை தற்போது இணையதளத்தில் வெளியிடாமல் இந்தி கட்டாயம் என்று முதலில் குறிப்பிடப்பட்டிருந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்!

இதனால்தான் ஹிந்தி மொழியை கட்டாயமாக திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு இருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டன!

ஜனவரி மாதமே திருத்தப்பட்ட அறிக்கையை அதிகாரிகள் முதலில் வெளியிட்டிருந்தால் இந்த சர்ச்சை ஏற்பட்டு இருக்காது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்!

ஏற்கெனவே இது குறித்து முன்னர் கருத்து தெரிவித்திருந்த ஹெச்.ராஜா, ஹிந்தி கற்றுத் தரப்படும் திமுக.,வினர் நடத்தும் பள்ளிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் படும். ஹிந்தி கற்கும் திமுக., குடும்பத்தினரின் வாரிசுகள் படிக்கும் பள்ளிகளின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்றெல்லாம் கூறியிருந்தார்.

2 thoughts on “திமுக.,வினருக்கு சொந்தமான ஹிந்தி கற்பிக்கும் பள்ளிகள்! பட்டியல் வெளியிட்டு ‘கவனித்த’ ஹெச்.ராஜா!”

  1. திமுகவின் முகத்திரையை திரு எச்.ராஜா அவர்கள் கிழித்துவிட்டார். ஹிந்தி எதிர்ப்பு என்பதை கொஞ்சமும் வெட்கமே இல்லாமல் எப்படி இவர்களால் கூறமுடிகிறது? ஊருக்கு உபதேசம் செய்யும் முன், முதலில் நாம் அல்லவா அவ்வாறு நடந்து காட்டவேண்டும்? அப்போது தான் அடுத்தவருக்கு முன்மொழியும் அருகதை நமக்கு உண்டாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.