சுதந்திர தின விழா கொண்டாட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு!

Published:

indpendence-day-celeb
indpendence-day-celeb

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது, மத்திய உள்துறை அமைச்சகம்.

கொரோனா காலத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என அறிவுரை கொடுக்கப் பட்டுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப் பட்டுள்ளது.

டெல்லியில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி நடத்தப்படும் எனவும் விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. சுதந்திர தின நிகழ்ச்சியின் போது சரியான சமூக இடைவெளி கடைபிடிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தின் போது பெரிய அளவிற்கு மக்கள் கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுதந்திர தினத்தை கொண்டாடவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

கொரோனா முன்கள பணியாளர்களை கௌரவிக்க வேண்டும். கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் கவுரவிக்கும் விதமாக விழாவிற்கு அழைக்க வேண்டும்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Related articles

Recent articles

spot_img