ஏப்ரல் 23, 2021, 8:12 காலை வெள்ளிக்கிழமை
More

  காதலனுடன் சென்ற மகள்! தாயும் சகோதரனும் தேடிக் கொண்ட முடிவு!

  lovers

  திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவாசி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி பன்னீர்செல்வம் – நீலாவதி.. இவர்களுக்கு பால்ராஜ் 26, சின்னத்துரை 24, மகள்கள் மீரா 30, கல்பனா 23, மீனா 21, ஆகிய 2 மகன்கள் 3 மகள்கள் உண்டு.

  விவசாய குடும்பம் இது. பால்ராஜ் சென்னையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

  அதேபோல, மீரா, கல்பனா 2 பேருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது.. 2 பேருமே லவ் மேரேஜ் செய்து கொண்டு தனியாக போய்விட்டனர்.

  இந்த நிலையில் லாக்டவுன் வரவும், பால்ராஜ் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அப்போதுதான், இன்னொரு தங்கச்சி மீனா ஒரு இளைஞரை காதலித்து கொண்டிருப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியானார். அதனால் மீனாவை கூப்பிட்டு, “ஏற்கனவே 2 பேரும் இப்படித்தான் லவ் பண்ணி கல்யாணம் செய்துக்கிட்டாங்க. அதுவே நம்ம குடும்பத்துக்கு கஷ்டம் தந்துட்டு இருக்கு. இப்போ நீயும் லவ் பண்ணினால் என்ன அர்த்தம்? நான் வேற ஒரு மாப்பிள்ளையை பார்க்கிறேன்.. இந்த காதல் வேண்டாம்” என்று கேட்டு கொண்டுள்ளார்.

  ஆனால் மீனா பிடிவாதமாக இருந்தார்.. காதலை கைவிட விருப்பம் இல்லை என்றும் பால்ராஜிடம் சொல்லிவிட்டார்.. ஆனால் தொடர்ந்து பால்ராஜ் அட்வைஸ் செய்து கொண்டே இருக்கவும், மீனா வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார்.. அந்த இளைஞரையே கல்யாணமும் செய்து கொண்டார்.

  Screenshot_2020_0810_111530

  இதனால் அதிர்ச்சி அடைந்த பால்ராஜ், நேற்று முன்தினமெல்லாம் அழுது கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் மனசு உடைந்து வாய்க்கால் கரையோரத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை கண்டு இவர்களது அம்மா நீலாவதி கதறி கதறி அழுதார். பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது.. மகன் இறந்தபிறகு அன்றைய நாள் முழுவதும் நீலாபதி பிரம்மை பிடித்தவாறே உட்கார்ந்திருந்தார்.

  3 மகள்களும் இப்படி காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்களே, மகனும் இப்படி தூக்கில் தொங்கிவிட்டானே என்று வேதனையில் இருந்தவர், துக்கம் தாங்காமல் விடிகாலை தன்னுடைய புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வாத்தலை போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்நாள் மகன், அடுத்த நாள் தாய் என ஒரே குடும்பத்தில் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை தந்து வருகிறது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-