நாள்தோறும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவந்தார்
சின்னத்திரை நடிகைகள் தற்போது சினிமாவுக்குள் செல்வது அதிகமாகி வருகிறது. பிரியா பவானிசங்கர், ஐஷ்வர்யா ராஜேஷ் ஆகியோரை தொடர்ந்து திவ்யா துரைசாமி திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் ஊரடங்கு நேரத்தில் நாள்தோறும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவந்தார். முதலில் அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை வெளியிட்ட திவ்யா துரைசாமி தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட ஆரம்பித்தார். இந்நிலையில் இவர் தற்போது இரண்டு படங்களில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரியா பவானி சங்கரை தொடர்ந்து திவ்யா துரைசாமிக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



