குழந்தையை கடத்த முயன்ற இருவர்! ஒற்றையாக போராடி மீட்ட தாய்! குவியும் பாராட்டு! வைரல் வீடியோ!

Published:

baby-kidnap

தண்ணீர் கேட்டு குழந்தையை கடத்த முயன்ற திருடர்களை தாய் தூரத்தி பிடித்து மீட்ட சம்பவம் சிசிடிவி காமெராவில் பதிவாகி வைரலாகி வருகிறது.

தில்லியில் உள்ள ஷகர்பூர் பகுதியை சேர்ந்தவர் உஷா. இவர் தனது குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டுபேர் உஷாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

இருவரும் தலை கவசம் அணிந்திருந்ததால் வந்தவர்கள் யார் என்று உஷாவால் அடையாளம் காணமுடியவில்லை.

இந்நிலையில், தண்ணீர் எடுப்பதற்காக உஷா வீட்டிற்குள் சென்றபோது வீட்டின் வெளியே வெளியாடிக் கொண்டிருந்த அவரது 4 வயது பெண் குழந்தையை இருவரும் இருசக்கர வாகனத்தில் கடத்த முயற்சித்தனர்.

இந்த காட்சியை கண்டதும் உடனடியாக துணிச்சலாக செயல்பட்டார். அவர்களிடம் போராடி சண்டையிட்டு குழந்தையை காப்பாற்றியதோடு, அவர்கள் தப்பிவிடக்கூடாது என இருசக்கர வாகனத்தையும் இழுத்து தடுக்க முயன்றார்.

baby-kidnap-1

இதனால் ஒருவன் வாகனத்தில் இருங்கி நடந்தே தப்பியோட, மற்றொருவன் நீண்ட நேரம் போராடி அந்த வீர பெண்மனியிடம் இருந்து தப்பித்து தலைதெறிக்க ஓடினார். இருவரையும் துரத்தியபடி அருகில் வசிப்பவர் ஓட, மற்றொரு இளைஞரோ சமயோஜிதமாக செயல்பட்டு இருசக்கர வாகனத்தை சாய்த்து தடுத்து நிறுத்தினார். இருப்பினும், கடத்தல்காரர்கள் இருவரும் ஹெல்மெட்டால் தாக்கிவிட்டு, அவர்களிடம் இருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என தலைதெறிக்க ஓடினர். இந்தகாட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

கடத்தல்காரர்கள் இருவரும் விட்டுச்சென்ற பையில் இருந்த ஒரு நாட்டுத்துப்பாக்கி, 4 தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார்,இருசக்கர வாகன எண் மற்றும் சிசிடிவி காட்சிகளை கொண்டு தீரஜ் என்பவரை கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையில், குழந்தையின் பெரியப்பாதான் தீரஜ் என்பது தெரியவந்துள்ளது. துணி வியாபாரியான குழந்தையின் தந்தையிடம் இருந்து 35 லட்சம் ரூபாய் பணம் பறிக்கும் நோக்கில் கடத்த முயன்றது விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து தீரஜ், அவருக்கு உதவிய நண்பர் ஒருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடத்தல் சம்பவத்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போகாமல், துணிச்சலாக சண்டையிட்டு குழந்தையை மீட்ட தாய்க்கும், எது நடந்தாலும் நமக்கென்ன என்ற பலருக்கு மத்தியிலும் இருவரையும் விரட்டிப் பிடிக்க முயன்ற அக்கம் பக்கத்தினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Related articles

Recent articles

spot_img