டிவிட்டர் புகாருக்கே… உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸ்! பாராட்டி மகிழ்ந்த குஷ்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

kushboo - 2026

குஷ்புவின் டிவிட்டர் புகாருக்கே உடனடி நடவடிக்கை எடுத்த சென்னை சிட்டி போலீசார் இப்போது பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றனர்.

நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டு, தனது புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்!

நடிகை குஷ்பு பட்டினப்பாக்கத்தில் வசித்து வருகிறார்! அவரது வீடு அமைந்துள்ள தெருவில் சில நாட்களாக கேட்பாரற்ற நிலையில் சரக்கு வேன் ஒன்று நம்பர் பிளேட் இன்றி நின்று கொண்டிருந்தது!

அதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ஜூன் 23ம் தேதி, நேற்று முன்தினம் பதிவிட்டிருந்தார்.

இதை அறிந்த பட்டினப்பாக்கம் போலீசார், அந்த சரக்கு வேனை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தினர். பின்னர் அந்த வேன் குறித்து விசாரித்ததில், அந்த வேன்  கால்நடை மருத்துவர் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.

கால்நடை மருத்துவர் அந்த வேனை புதிதாக வாங்கியதும், அவர் மருத்துவமனைக்கு தேவையான பொருள்களைக் கொண்டு செல்ல பயன்படுத்த இருந்ததும் தெரியவந்தது!

இதை அடுத்து, அந்த மருத்துவர் பெயரை வெளியிடாத போலீசார் புதிய வேன் என்பதால் நம்பர் பிளேட் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்தது என்றும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி, வேனை விடுவித்தனர்.

இதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நடிகை குஷ்பு, உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.


பொதுமக்கள் புகார் அளிக்க தங்களது ஆண்ட்ராய்ட் மொபைல் போனில் சென்னை சிட்டி போலீசாரின் இந்த ஆப்..பினை பதிய வைத்துக் கொள்ளலாம்.. அந்த சுட்டி… https://play.google.com/store/apps/details?id=police.traffic.chennai.chennaitrafficpolice

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.