வீட்டில் பிரிட்ஜ் வெடித்து உயிரிழந்த செய்தியாளர் பிரசன்னா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் முதல்வர் நிதியுதவி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

prasanna newsj - 2026

நள்ளிரவில் வீட்டில் பிரிட்ஜ் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டதால் உயிரிழந்ததாகக்  கூறப்பட்ட  நியூஸ் ஜே., சேனலில் பணி புரிந்த செய்தியாளரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தாம்பரம் அருகே சேலையூரில் வசித்து வந்தவர் பிரசன்னா. பல்வேறு ஊடகங்களில் பணிபுரிந்தவர். 35 வயதாகும் இவர் இறுதியாக நியூஸ் ஜே டிவியின் சென்னை பகுதி செய்தியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று காலை அவரது வீட்டில் இருந்து புகை வெளிவந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் வசிப்பவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல்  கொடுத்துள்ளனர். அதன் பேரில் தீயணைப்புத் துறையினர் வந்து பார்த்ததில், வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் வீட்டில் இருந்த நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் செய்தியாளர் பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா, அவரது தாயார் ரேவதி ஆகிய 3 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மறைவுக்கு பல்வேறு பத்திரிக்கை யாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்,  பிரசன்னாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.