மோடியின் வேண்டுகோளை ஏற்று கூடுதலாக 30 ஆயிரம் ஹஜ் பயணிகளுக்கு சவுதி அரேபியா அனுமதி அளித்துள்ளது.
ஜி20 மாநாட்டிற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, முதலீடு, எரிசக்தி பாதுகாப்பு, பயங்கரவாதத்தை ஒழித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப் பட்டன.
இருதரப்பு பேச்சு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விஜய் கோகலை செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் இருந்து கூடுதலாக 30 ஆயிரம் முஸ்லிம்கள் மெக்காவுக்கு ஹஜ் புனிதப் பயணம் வருவதற்கு சவுதி அரேபிய அரசு அனுமதி அளிப்பதாக உறுதியளித்துள்ளது என்றார்.
தற்போது இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 1.70 ஆயிரம் இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு ஹஜ் பயணம் செல்கின்றனர். இனி 2 லட்சம் இஸ்லாமியர்கள் ஹஜ் செல்ல முடியும்!




