bsnl logo - 2026

புது தில்லி: அரசு சார் தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்,., நிறுவனம் வியாழக்கிழமை வீடியோ கால் ஆபீஸ் என, விசிஓ.,க்களை அறிமுகம் செய்தது. எஸ்.ஐ.எஸ்., இன்ஃபோசிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, பழைய பிசிஓ.,க்களை விசிஓ., எனப்படும் வாய்ஸ் கால் ஆபீஸஸ் என மாற்றி வருகிறது.

பிஎஸ்என்எல் டெலிபோன் அடுத்த தலைமுறை நெட்வொர்க்கிங் தொழில்நுட்பத்தில் அப்கிரேடு செய்யப்படுகிறது. ராஜஸ்தானில் லேன்ட்லைன்களில் ஸ்மார்ட்போன் அம்சங்களுடன் கூடிய அப்கிரேடுகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.

இதன்மூலம், எஸ்எம்எஸ், சாட்டிங், வீடியோ கால் உள்ளிட்டவற்றை லேன்ட் லைனிலும் மேற்கொள்ள முடியும். மேலும், லேன்ட் லைன் அழைப்புகளை மொபைலிலும் பெறமுடியும்.

மேலும், லேன்ட் லைன் அழைப்புகளை மொபைலிலும் பெறமுடியும்.

பிஎஸ்.என்.எல்., பிசிஓ.,க்களை விசிஓ.,க்களாக மாற்றி வருகிறோம். மக்கள் இதன் மூலம் எந்த போனுக்கும் வாய்ஸ் கால்ஸ் செய்யலாம். வீடியோ கால்ஸை இணையதள இணைப்புடன் கூடிய ஐபி.,போன்களில் மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளார் பிஎஸ்.என்.எல் தலைவரும் மேலாண் இயக்குனருமான ஆர்.கே.உபாத்யாய.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

மேலும், 45 நொடி வீடியோ கால் கட்டணமாக ரூ.3 வசூலிக்கப்படும். அதில் 30 சதவீதம் கமிஷன் கட்டணமாக சேவை வழங்குபவருக்கு அளிக்கப் படும். பிஎஸ்.என்.எல்., வருவாயில் பெரும்பகுதி லேண்ட்லைன் இணைப்புகள் மூலமே கிடைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் உபாத்யாய.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending