அஞ்சாநெஞ்சன் அய்யோ பாவம்! திமுக., எனும் குடும்பச் சொத்து ஸ்டாலின் வாரிசுக்கு கைமாற்றம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

azhagiri durai dayanidhi stalin udhayanidhi - 2026

திமுக., என்பது கருணாநிதியின் குடும்பச் சொத்துதான் என்று முடிவாகிவிட்டது. அதன் அடிப்படையில்தான், சென்னை – மதுரை, வடக்கு – தெற்கு என்று பகுதி பிரித்து இரண்டு மகன்களுக்கும் பட்டா போட்டுக் கொடுத்தார் திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி. திமுக., என்ற கட்சியின் விரிவே அவர் பெயர்தான் என்று ஆகியிருந்த காலத்தில், தன் மகன்கள் இருவர் மட்டுமன்றி, மகள், மாமா, மாமா மகன்கள், குடும்பத்தில் உள்ள இன்ன பிற புத்திசாலிகள் ஆகியோருக்கு கட்சிப் பதவிகளை ஒதுக்கி வைத்திருந்தார்.

கருணாநிதி சொல்ல நினைப்பதை தன் மூலம் வெளிப்படுத்தும் இனமான பேராசிரியர் மற்றும் இன, மான பேராசிரியரான க.அன்பழகன் பொதுச் செயலராக வெகு காலம், காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

தற்போது கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு தென்மாவட்டங்களின் ஒரு பகுதியான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் என பிரித்துக் கொடுத்தாயிற்று!

இப்படி, குடும்பக் கட்சிதான் என்று ஆகிவிட்ட பின்னர், குடும்பத்தின் ஒரு மகனை மட்டும் ஏன் ஒதுக்கி வைத்துவிட்டு, வாரிசு அரசியலை திமுக., நடத்த வேண்டும் என்பதுதான் மதுரைக்காரர்களின் ஒரே போர்க்குரல்!

இந்நிலையில் நல்லநாள் பார்த்து வளர்பிறையில் பொறுப்பேற்கும் உதயநிதியாவது நீண்ட நெடும் காத்திருப்பு இல்லாமல் விரைந்து திருக்குவளை மு கருணாநிதி (திமுக) குடும்ப சேமநல நிதிக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்க கோபாலபுர கிருஷ்ண பகவான் அருள் புரிவாராக என்று கருத்து தெரிவித்துள்ளனர் நெட்டிசன்கள்!

இதற்கு மூடநம்பிக்கை, ராமசாமி நாயக்கன் கொள்கை என்றெல்லாம் வாய்திறவாத ஓசிச்சோறுகள் என்றென்றும் சோறும் வாயுமாக வாழ வாழ்த்துகள் என்றும் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.