*தன்னால் அனுமதி அளிக்கப்பட்ட மற்றும் விதிவிலக்குகளுக்கு உட்பட்ட நிகழ்ச்சிகள், போராட்டங்கள் தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதித்து சென்னை பெரு நகர காவல்துறை ஆணையர் 13 ம் தேதி ஆணை பிறப்பித்தார்.
* 14 ம் தேதி நடத்தப்பட்ட போராட்டத்திற்கு அனுமதி பெறப்பட வில்லை. அதனால் அது சட்ட விரோத போராட்டம்.
* சட்டத்தை எதிர்க்க உரிமை உண்டு, அமலில் உள்ள சட்டத்தை மீற உரிமை இல்லை என்பது அடிப்படை நீதி. அதற்கான நிவாரணத்தைத் தேட வேண்டிய இடம் நீதி மன்றம்.
சென்னை காவல் துறை ஆணையரின் தடை உத்தரவு அநீதியானது என்று போராட்டக்காரர்கள் கருதி இருந்தால்,
நீதிமன்றம் மூலம் அனுமதி கோரி இருக்க வேண்டும். அப்படி கோராமல் நடத்தப்பட்ட போராட்டம் சட்ட விரோதமானது. அதை கலைக்க – தேவை எனில் – பலப்பிரயோகம் நடத்த காவல் துறைக்கு அதிகாரம் அளிக்கிறது சட்டம்.
* சட்ட விரோதமாக நடத்தப்பட்ட ஒரு போராட்டத்தை கலைக்க காவல் துறை மேற்கொண்ட நடவடிக்கையை அரசியல் கட்சிகள் எதிர்ப்பது, சட்டத்தை மீறி, சட்ட விரோதமாக
நட்ந்து கொள்ள விரும்புகிறவர்களை ஊக்குவிப்பதற்கு சமமானது. அரசியல் ரீதியாக இது லாபகரமானதாக தோன்றினாலும், பொது அமைதி சீர்கேட்டை அங்கீகரிப்பது
ஆபத்தான விளையாட்டு.
இன்று இந்த போராட்டம், நாளை வேறு ஒரு போராட்டம், அதன் பிறகு, அதன் பிறகு என்று தொடரும் சட்ட மீறல்கள் இயல்பானவை என்ற நிலை ஏற்பட்டால் இயல்பு வாழ்க்கைக்கு வாய்ப்பில்லாத நாள் ஒன்று வரும். அப்போது இந்த அரசியல் தலைவர்களாலும் சரி செய்ய முடியாத நிலை உண்டாகும்.
வண்ணாரப்பேட்டை போராட்டம்-2
மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம் என்று அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் சொல்கின்றன. ஆனால், இதற்கான பிரச்சாரத்தை பள்ளி வாசல் முன்னெடுத்துச் செல்கிறது.
- பிரச்சாரம் செய்ய பள்ளி வாசலுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், தன்னெழுச்சியான போராட்டம் என்று காட்டிக் கொள்வது ஒளிந்து இயங்கும் செயலுக்கு உதாரணம். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் பின்னால் இருந்து இயக்கியவர்கள் தப்பித்துக் கொள்ள உதவும் வழி இது.
வண்ணாரப்பேட்டை போராட்டம்-3
1- போராட்டக்காரர்களை கலைந்து செல்லச் சொல்கிறது காவல் துறை. அவர்கள் மறுக்கிறார்கள். தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
2- போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சில் காவல்துறை அதிகாரி படுகாயம்.
3- காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களை
விடுதலை செய்ய வேண்டும் என்று சாலை மறியல்.
4- சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, காவல்துறை ஆணையர் பேச்சு வார்த்தை நடத்துகிறார். * பேச்சு வார்த்தை நடத்தும் முடிவை ஆணையர் தன்னிச்சையாக எடுத்திருக்க வாய்ப்பில்லை. “ மேலிடம் “ உத்தரவிட்டு இருக்க வேண்டும்.
5- கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய ஆணையர் ஒப்புக் கொள்கிறார். போராட்டத்தை கை விடுவதாக போராட்ட அமைப்பினர் அறிவிப்பு.
ஆனால், போராட்டம் விடப்படவில்லை. மாறாக, சென்னையில் மட்டுமின்றி தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்கிறது. அதாவது, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் அதிகாரம் காவல்துறை ஆணையினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டவர்களுக்கு இல்லை. வேறு யாரோ தீர்மானிக்கிறார்கள்.
வண்ணாரப்பேட்டை போராட்டம்-4
போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை எதிர்த்து தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டம் பரவியதில் வியப்பு இல்லை.
காவல்துறை நடவடிக்கை இரவு 10 மணிக்கு பிறகு நடந்தது. அதற்கான கண்டன போராட்டம் மறுநாள் பரவி இருந்தால் அது இயல்பானது. ஆனால், அன்று இரவே பரவியது. அமைப்பு ரீதியாக இயங்கும் அரசியல் கட்சிகளுக்கே கூட இரவு நேரத்தில் தொண்டர்களைத் திரட்டுவது சிரமமான ஒன்று.
சென்னை போராட்டத்தில் தடியடி நடக்கும் – அதை எதிர்த்து வீதிக்கு வந்து போராட தயாராக இருக்க வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்தது போல பரவிய விதம் ஆச்சரியமானது.
CAA வுக்கு எதிராக போராடுகிறோம் என்றவர்கள் இப்போது , CAA , NPR, NRC க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று புதிய கோரிக்கையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
CAA, NPR, NRC எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பின்னணியில் நுட்பமான இஸ்லாமிய சமுதாய தலைமைக்கான போட்டிப் போராட்டம் ஒன்று நடந்து கொண்டு இருக்கிறது.
அகில இந்திய அளவிலும் இது நடக்கிறது. தமிழகத்திலும் நடக்கிறது. தமிழகத்தைப் பொறுத்த அளவில் அகில இந்திய முஸ்லீம் லீக். ஜவஹருல்லாவின் TMMK. பாபுலர் ஃபிரண்ட் அமைப்பின் அரசியல் பிரிவான SDPI . தவ்ஹீத் ஜமாத். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இடையில் இந்த போட்டி நடந்து கொண்டு இருக்கிறது.
மோடி, அமித் ஷா மூலம் இஸ்லாமிய சமுதாயம் மிகப் பெரிய அச்சுறுத்தலை சந்தித்துக் கொண்டு இருக்கிறது என்ற அச்சம் அந்த சமுதாய மக்கள் மனதில் ஆழமாக ஊன்றப்பட்டு இருக்கிறது. படித்தவர்கள், படிக்காதவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், கீழ் தட்டு மக்கள் என்று அனைவரும்
அதை தீவிரமாக நம்புகிறார்கள். அது உண்மை அல்ல என்று யார் சொன்னாலும் நம்பும் நிலையில் அவர்கள் இல்லை.
தமிழ் நாட்டில் நடந்த CAA போராட்டங்களில்
வீரியமான போராட்டம் எது என்பதைக் கொண்டே,
மோடி, அமித் ஷா எதிர்ப்பு அரசியலை துணிச்சலாக எதிர் கொள்ளக் கூடிய
தலைமை எது என்று தீர்மானிக்க வேண்டிய
நிலைக்கு இஸ்லாமிய சமுதாயம் தள்ளப்பட்டு இருக்கிறது.
2 கோடி கையெழுத்து இயக்கத்தை விட தவ் ஹீத் ஜமாத் பின்னணியில் இருந்து இயக்கும் “ வண்ணாரப்பேட்டை” போராட்டம் வீரியமானது.
மோடி, அமித் ஷா அரசியலை வீழ்த்த இந்த கட்சிக்கு ஓட்டளியுங்கள் என்று எந்த முஸ்லீம் அமைப்பு சொன்னால் இஸ்லாமிய சமுதாயம் வாக்களிக்கும் ? அதற்கான போட்டித் தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது.
???? வசந்தன் பெருமாள் – Vasanthan Perumal