தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தில் அனைத்திந்திய ஆயுர்வேத கூட்டமைப்பு தமிழ் மாநிலக்குழு மற்றும் செங்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த இலவச ஆயுர்வேத முகாமுக்கு ஏஐஏசி தலைவர் பிரேம்வேல் தலைமை தாங்கினார். அரசு சித்த மருத்துவர் டாக்டர் கலா, ரோட்டரி கிளப் தலைவர் எம்எஸ். இராமகிருஷணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செங்கோட்டை அரசு ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் ஹரிஹரன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த முகாமை குற்றாலம் ஐ.எம்.ஏ தலைவர் டாக்டர் சீதாலெட்சுமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முகாமில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.