காமராஜ் பிறந்த நாள் கட்-அவுட் வைக்கும் போது பரிதாபம்! மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன்

EB - 2026

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சுரண்டையில் காமராஜர் ரத்த தான கழகம் சார்பில் கட் அவுட் பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இருவர்  உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கபட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள சுரண்டையில் காமராஜர் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக காமராஜர் ரத்ததான கழகம் சார்பில் நேற்றிரவு (14.07.19) பேனர் மற்றும் கட் அவுட் வைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மணி (25) சரவணன் (24) என இளைஞர்கள் உயிரிழந்தனர். அரவிந்தன் (24) மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.