கேரளாவை வரலாறு காணாத மழைபலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மீட்புப் பணிக்குரிய 100 ஹெல்மெட், கையுறைகள் உள்ளிட்ட பொருள்களை கேரளாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள், ரஜினிகாந்த்தின் ஆர்.பி.எஸ்.ஐ என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கம் நடத்திவரும் ரசிகர்கள்
ஏற்கெனவே, 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பின்போது, இவர்களின் சேவையை ரஜினி பாராட்டியதோடு தனுஷ், சௌந்தர்யா மூலம் இவர்களுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பி, மக்களுக்குக் கொடுக்கவைத்தார்.
அதைத் தொடர்ந்து, டிஜிட்டல் டெம்போ வேனில் போய், சமீபத்தில் ரஜினி மக்கள் இயக்கத்துக்கு கரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உறுப்பினர்கள் சேர்த்தார்கள்.
இப்போது, கேரளாவுக்கு மீட்புப் பணியில் இருப்பவர்களுக்கு உதவும் அல்ட்ரா பாதுகாப்பு ஹெல்மெட்டுகள், தண்ணீரிலும் தூசியிலும் தெளிவாகத் தெரியும் கண்ணாடி, கையுறைகள் அடங்கிய நிவாரணப் பொருள்களை அனுப்பிவைத்து அசத்தியிருக்கிறார்கள்.



