அதிமுக.வில் இருந்து அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி சின்னசாமி நீக்கப்பட்டார். கட்சி கட்டுப்பாட்டை மீறி சின்னசாமி செயல்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்தபோது 8 கோடி ரூபாய் பணத்தை கையாடியதாக சின்னசாமி கோவையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் சின்னசாமியை ஆஜர்படுத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்த சின்னசாமி தற்போது அ.ம.மு.க.வில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


