சமூக ஊடகங்களில் வதந்தி பரப்ப வேண்டாம் ! ஐதராபாத் காவல்துறை எச்சரிக்கை !

இந்தியா சற்றுமுன்

cooldrinks - 2026ஐதராபாத் போலீஸ் பெயரை பயன்படுத்தி, கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகிறது. அந்த செய்தியில், ”ஐதராபாத் காவல்துறை சார்பாக இந்த முன்னெச்சரிக்கை தெரிவிக்கப்படுகிறது,

இந்தியா முழுக்க விற்பனையில் உள்ள மாஸா, ஃபேன்டா, 7அப், கோக கோலா, மவுண்டென்ய் ட்யூ உள்ளிட்ட குளிர்பானங்களில் எபோலா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவரின் ரத்த துளிகள் கலந்துவிட்டது என்றும் .
எனவே, அவற்றை குடிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்,” என்று பகிரப்பட்டது,

இந்த செய்தி பரபரப்பை கிளப்பிய நிலையில், .இந்தியா முழுக்க விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களில் எபோலா வைரஸ் எதுவும் இல்லை என்று ஐதராபாத் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இப்படி எத்தகைய சுற்றறிக்கையையும் தாங்கள் விடவில்லை என்றும், இத்தகைய வதந்தி பரப்புவது தண்டனைக்கு உரிய செயல் என்றும், ஐதராபாத் காவல்துறை தற்போது சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கடந்த மாதத்தில், சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய குற்றத்திற்காக, 3 பேரை ஐதராபாத் காவல்துறை கைது செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.