பொய்வழக்கு போடும் காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்யக் கோரி டிஐஜி.,யிடம் மனு!

சற்றுமுன் நெல்லை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

dig petition - 2026

ஹிந்து இயக்க பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு போடும் தென்காசி காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்யக் கோரி, திருநெல்வேலி மண்டல காவல் துணைத் தலைவரிடம் இன்று பஜ்ரங் தளத்தின் சார்பில் மனு அளிக்கப் பட்டது.

ஹிந்து இயக்க பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு போட்டும் அவர்களை மிரட்டியும், ஆபாசமாக பேசியும் நீண்ட வருடங்களாக ஒரே பகுதியில் பணிபுரிந்தும் சமூக விரோதிகளோடு கை கோத்தும் செயல்படும் தென்காசி, செங்கோட்டை காவல் ஆய்வாளர்களை பணியிடை நீக்கம் செய்யக் கோரியும், வேறு பணியிடங்களுக்கு மாற்றக் கோரியும் நெல்லை மண்டல காவல் துணை தலைவரிடம் விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் பா.சரவணகார்த்திக் மற்றும் தென்காசி செங்கோட்டை ஹிந்து அமைப்புகள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது!

விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் M. முத்துகுமார், மாவட்ட செயலாளர் இ.ஆறுமுகக்கனி, தச்சநல்லூர் மண்டல் துணை தலைவர் M.மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.