புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கம்… சென்னையில் இன்று மாலை…!

உள்ளூர் செய்திகள் கல்வி சென்னை நிகழ்ச்சிகள்

nationaleducationpolicy - 2026

தமிழ்க் கூடத்தின் சார்பில் புதிய கல்விக் கொள்கையும் தமிழகத்தின் எதிர்காலமும் என்ற கருத்தரங்க நிகழ்ச்சி திங்கள் கிழமை இன்று மாலை 5.30க்கு, சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது!

புதிய கல்விக் கொள்கையும் தமிழகத்தின் எதிர்காலமும் என்ற தலைப்பில் எவ்வித அரசியல் சார்புமின்றி தமிழகத்தின் எதிர்கால நன்மைக்காக கருத்துகளை மக்கள் முன்பு எடுத்து வைப்பதுடன் ஆக்கபூர்வமான யோசனைகளை அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பான கருத்தரங்கம் இது என்று தமிழ்க் கூடத்தின் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் கூட்டத்தின் செயலாளரும் வின் தொலைகாட்சி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான தேவநாதன் யாதவ் வரவேற்புரை நிகழ்த்துகிறார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ பாலகுருசாமி தலைமை தாங்க, பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ், பிரியன், ஏபிஜே அப்துல் கலாம் ஆலோசகர் பொன்ராஜ் கல்வியாளர் காயத்ரி, ஆடிட்டர் சீனிவாசன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்குகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.