போர்கப்பல்கள் அணிவகுப்பு ! ரஷ்யாவில் கடற்படை தினம் !

உலகம் பொது தகவல்கள்

rashya - 2026ரஷியாவில், கடற்படை தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் போர் கப்பல்கள் கண்கவர் அணிவகுப்பு நடத்தின

செயி.ன்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் அருகில் உள்ள பின்லாந்து வளைகுடா பகுதியில், பால்டிக் கடல் பரப்பிலிருந்து சிரியா நாட்டின் கடலோர பகுதிவரை போர்க்கப்பல்களின் அணிவகுப்பு நடைபெற்றது. அதிபர் விளாடிமிர் புதின், நேற்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோக்லாந்து தீவுக்கு படகு மூலம் சென்றார். rashaaa - 2026இதில் கலந்து கொண்ட   ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்,  சிறப்புரையாற்றி,  நீர்மூழ்கி கப்பலில் சென்று, இரண்டாம் உலக போரில் கடலில் மூழ்கியது சோவியத் நீர்மூழ்கி  கப்பலை பார்வையிட்டார். ரஷ்ய கப்பற்படை தின அணிவகுப்பில் இந்திய போர்க்கப்பலும் பங்கேற்றது. கடற்படைக்கு சொந்தமான 43 போர்க்கப்பல்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதனை காண ஏராளமான பொதுமக்களும் வந்திருந்தனர்.rashaa - 2026ஆய்வுக்கு பின் கரைதிரும்பிய புதின், ‘ரஷ்ய மக்கள் மற்றும் அவர்களின் பணிகளை நன்கு புரிந்து கொள்ளவே, இருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பலில் கடலின் கீழ் பகுதிக்கு சென்றதாக’ தெரிவித்தார்.kadarpadai day - 2026நிகழ்ச்சியில் ரஷ்யாவின் நட்பு நாடு என்ற அடிப்படையில் இந்தியாவின் ஐஎன்எஸ் டர்காஷ்  அணிவகுப்பில் கலந்து கொண்டது. அப்போது, இந்திய கேப்டன் சதீஷ் வாசுதேவ், அதிபர் புதினை நோக்கி வணக்கம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.