இன்று சர்வதேச புலிகள் தினம்..! சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்த புலிகள்!

Published:

tigersday juy29 - 2026

இன்று சர்வதேச புலிகள் தினம். இதையொட்டி புலிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தகவல்கள் பரிமாறப்படுகின்றன

புலிகள் சுதந்திரமாக பாதுகாக்கப்பட்டால் காடுகளையும் காட்டில் வாழும் மற்ற விலங்குகளையும் உயிரினங்களையும் உணவு சங்கிலியையும் நாம் காப்பாற்றியதாக பொருள் என்று வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்!

புலிகள் மொத்தம் 13 நாடுகளில் தான் உள்ளன. 15 முதல் 25 ஆண்டுகள் வரை வாழும் புலிகள் தனிமை விரும்பிகள். மான்களை அதிகம் வேட்டையாடி உண்ணும் புலிகள் 2 முதல் 6 குட்டிகள் வரை போடும்!

பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த புலிகள், உடலில் உள்ள கோடுகளை வைத்து அதன் தனித்துவத்தை பறைசாற்றுகின்றன. இந்தியாவில் புலிகளை பாதுகாக்க தேசிய புலிகள் காப்பகம் ஆணையம் அதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது!

புலிகளின் வாழ்விட பரப்பளவை அதிகப்படுத்துவது, வேட்டையாடப் படுவதை தடுப்பது, விபத்தில் சிக்கி தவிர்ப்பது உணவுத் தேவைக்கு மான் போன்ற உயிரினங்களை அதிகப்படுத்துவது உள்ளிட்ட அடிப்படையான விஷயங்களில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

இதன் விளைவாக 2006 இல் 1411 என்ற எண்ணிக்கையில் இருந்த புலிகள் 2014இல் 1896ஆக அதிகரித்தது! புலிகளை பாதுகாக்க அதனால் விளையும் நன்மை உணவுச் சங்கிலி அமைப்பு ஆகியவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்

புலிகளின் உடல் பாகங்களில் மூலிகை குணங்கள் உள்ளது என்ற மூடநம்பிக்கையை அகற்ற வேண்டும்; புலிகளின் வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டும்; அதன் பரப்பளவை வளர்ச்சி என்ற பெயரில் நாம் குறுக்கி விடக்கூடாது; புலிகளின் உணவை வாழ்விடத்தை நாம் பறிக்கக் கூடாது என்கின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள். புலிகள் அதிகம் வாழும் பகுதிகளில் மற்ற உயிரினங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

இன்று சர்வதேச புலிகள் தினம் என்பதால், சமூக வலைத்தளங்களிலும் புலிகள் ஆக்கிரமித்திருக்கின்றன. பலரும் புலிகள் படங்களை, வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது…

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

2014ல் எடுத்த கணக்கெடுப்பின்படி 2,226 புலிகள் இருந்தன. 2018ல் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967. தற்போது புலிகள் எண்ணிக்கை 33 சதவீதம் உயர்ந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. நாம் அனைவரும் புலிகளைக் காக்க கடமைப்பட்டுள்ளோம். புலிகளைக் காக்க அரசும் முழு முயற்சியில் இறங்கியுள்ளது. அரசின் நடவடிக்கை மற்றும் வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்றார்.

Related articles

Recent articles

spot_img